கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய அம்மாசை கொலை வழக்கின் தீர்ப்பு வரும் 30-ம் தேதி வழங்கப்பட உள்ளது..!

கோவை: கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மனைவி அம்மாவாசை (வயது 45). இவர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வக்கீல் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.


கோவை: கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மனைவி அம்மாவாசை (வயது 45). இவர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வக்கீல் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜவேலுவின் மனைவி வக்கீல் மோகனா, வெளிமாநிலங்களில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததும், அதற்காக போலீசார் அவரை தேடி வந்ததால், அவர் இறந்தது போல் நடித்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, ராஜவேலு அலுவலகத்திற்கு குடும்ப வழக்கு தொடர்பாக விவரம் கேட்க வந்த அமாவாசையை நண்பர்களுடன் சேர்ந்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர், இறந்தது தனது மனைவி மோகனா எனக்கூறி, ராஜவேலு மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்று தனது மனைவியை காப்பாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜவேல், மோகனா (47), பொன்ராஜ் (47), பழனிச்சாமி (45), ஆகியோரை கடந்த 2014-ம் ஆண்டு, போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, கோவை ஐந்தாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. சாட்சி விசாரணை முடிந்த நிலையில், அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இதையடுத்து, வருகிற 30-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும், என நீதிபதி முகமது பாருக் இன்று அறிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...