கோவை ஈச்சனாரி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; ஐ.டி ஊழியர் பலி; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!

கோவை: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லியோ ஸ்டான்லி (வயது 27). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.


கோவை: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லியோ ஸ்டான்லி (வயது 27). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவரது நண்பர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோவிந்து (27). இவர் வடவள்ளி பகுதியில் தங்கி அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காலத்தில் இருவரும் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனர். இதனால் கோவையில் தங்கி இருந்த அறையை காலி செய்து பொருட்களை எடுத்துச் செல்ல இருவரும் நேற்று கோவிந்தனின் காரில் கோவை வந்தனர்.

வடவள்ளியில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு, ஈச்சனாரிக்கு காரில் சென்ற போது, லியோ ஸ்டான்லி காரை ஓட்டினார். அப்போது, ஈச்சனாரி அருகே வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை கடக்க ஸ்டான்லி முயன்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியது.

இதில், காரை ஓட்டி வந்த ஸ்டான்லி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கோவிந்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு வந்த மதுக்கரை போலீசார் லியோ ஸ்டான்லி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...