கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ள வண்டிக்காரன் பிரிவு அருகே உள்ள தோட்டம் ஒன்றில், செல்வம் என்பவர் காய்கறி மொத்த வியாபார கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

அந்த காய்கறிகள் அங்கிருந்து பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மண்டியில் வேலை பார்ப்பவர்கள் நேற்று வழக்கம்போல் தக்காளி, பூசணிக்காய் போன்றவற்றை கடைக்கு வெளியில் பெட்டியில் அடுக்கி வைத்து விட்டுச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில், அந்த கடைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தக்காளி மற்றும் பூசணி காய்களை தின்றும் காலால் மிதித்து நாசப்படுத்தியது.
பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகளை தும்பிக்கையால் தூக்கி எறிந்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டது. இன்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் கடைகள் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த, வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- இந்தப் பகுதியில் இதுவரை யானை நடமாட்டம் இருந்ததே இல்லை. ஆனால், தற்போது வண்டிக்காரன் பிரிவு, குப்பேபாளையம் உட்பட மலை கிராம பகுதிகளில் ஒரு ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று கூட ஒரு மூதாட்டியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
அந்த யானை தான் இந்த கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து, அந்த யானையின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.