கோவை: கோவையில் இரு வேறு சம்பவங்களில் ஆட்டோ டிரைவர் மற்றும் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை காரமடை செட்டியார் வீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 55), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை தனது ஆட்டோவில் மாதம்பட்டியிலிருந்து - கரடிமடை ரோட்டில் வந்துகொண்டிருந்தார். அப்போது, பேரூர் அருகே வந்தபோது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து, பேரூர் செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ஈரோட்டைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65), இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை வந்து காரமடையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று காலை, அதே பகுதியில் உள்ள கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, சின்னசாமி திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.