கோவையில் லாட்ஜில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..!

கோவை: நாகப்பட்டினம் மயிலாடுதுறையை சேர்ந்த சிவபாலன் (வயது 38), என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். பின் அவர், சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.


கோவை: நாகப்பட்டினம் மயிலாடுதுறையை சேர்ந்த சிவபாலன் (வயது 38), என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். பின் அவர், சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

இந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து சிவபாலன் தங்கியிருந்த அறை கதவு பூட்டப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இன்று காலை சிவபாலன் அறையின் கதவைத் தட்டி பார்த்தனர்.அப்போது, வெகு நேரமாக கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது, சிவபாலன் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், தலைமையிலான போலீஸார் சம்பத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று உடலை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாலன் கோவைக்கு எதற்கு வந்தார்? ஏன் தற்கொலை செய்துகொண்டார்? குடும்ப பிரச்சனையா? கடன் தொல்லையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிவபாலனின் சொந்த ஊரான

நாகப்பட்டினம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...