கோவை பாலத்தின் சுவர் மீது பைக் மோதி வாலிபர் சாவு..!

கோவை: கோவையில் பாலத்தின் மீதுள்ள சுவற்றின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் பாலத்தின் மீதுள்ள சுவற்றின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பட்டி போஸ்ட், அரூர் தாலுகா, செங்குட்டை பகுதியில் வசிப்பவர் செல்வம் அவருடைய மகன் சரண் (வயது 23). சரண், தன் தாய் தந்தையோடு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கோவை கணபதி சங்கனூர் லே-அவுட் பகுதியில் தங்கி கணபதி பகுதியில் உள்ள ஒரு செல் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.

இன்று மதியம், அவர் மதிய உணவுக்காக காந்திபுரத்தில் இருந்து கணபதி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, டெஸ்டூல் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி பாலத்தின் ஓரத்தில் உள்ள சுவற்றில் பைக் மோதியது.

விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் (சென்ட்ரல்) வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...