பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து ஆனைமலை தாலுக்கா அலுவலகத்தில், மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்..!

கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பழங்குடி மக்களுக்கான வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பழங்குடி மக்களுக்கான வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.



இதையடுத்து, வட்டாட்சியருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று, முடிவுகள் எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், வன உரிமைச் சட்டம் 2006 யின் படி அனுபவ நிலப்பட்டா, இதுவரை கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு விரைந்து வழங்குவது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இம்மாதத்தில், ஆழியாறு, சேத்துமடை, அங்கலக்குறிச்சி, டாப்சிலிப் ஆகிய நான்கு மையங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி சாதிச்சான்றிதழ்

மற்றும் பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை விரைந்து வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது.

அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் பழங்குடியின மக்களின் பட்டா இல்லாத வீடுகளுக்கு, கிராம நிர்வாக அலுவலரை கொண்டு ஆய்வு செய்து விரைந்து பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கும், பட்டா இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு பெற மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்படும் என்றும், புளியங்கண்டி, சேத்துமடை அண்ணா நகர், தம்மம்பதி, பகுதிகளில் புதிய வீடுகள் கட்டிட பணி ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும், அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, மாலை 4 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் பரமசிவம். ஆனைமலை கமிட்டி தலைவர் அம்மாவாசை, செயலாளர் பத்மினி, உள்ளிட்ட

100க்கும், மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...