திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் சாலையில் உள்ள அம்மன் நகர், சோழன் நகர், ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த சூழலில், அப்பகுதி பொதுமக்கள் புதிய டாஸ்மாக் அமைக்க கண்டனம் தெரிவித்து உள்ளனர். அப்பகுதியில், ஏற்கனவே ஒரு மதுபானக்கடை உள்ள நிலையில், மேலும் ஒரு மதுபானக்கடை அமைந்தால் அப்பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவும் பள்ளி மற்றும் வேலைக்குச் சென்று வரக்கூடிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அது இடையூறாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
எனவே, அப்பகுதியில் மேலும்.ஒரு மதுபானக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.