வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள்: படகு இல்லம், தாவரவியல் பூங்கா பணிகளை எம் எல் ஏ எம் கஸ்தூரி வாசு நேரில் ஆய்வு..!

கோவை: வால்பாறையில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகிய பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறையில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகிய பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்த. படகு இல்லம் தாவரவியல் பூங்கா போன்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தற்போது வால்பாறையில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.



நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெறும் இடம், படகு இல்லம் பணிகள் நடைபெறும் இடம், தொகுப்பு வீடுகள் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். மேலும், கூழாங்கல் ஆற்றில் மரண குழிகளை மூடும் பணிகளையும் அப்போது பார்வையிட்டார்.

மேலும், நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார். பின், செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் ஆண்டு துவக்கத்திலேயே தாவரவியல் பூங்கா, படகு இல்லம் பணிகள் முடிவுற்று செயலுக்கு வரும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, அதிமுக நகரச் செயலாளர் மயில் கணேசன், வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி.அமீது சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...