கோவை: கோவையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து இடித்து அகற்ற வேண்டும், என மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்திரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஆபத்தான கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, சில தனியார் கட்டிடங்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. மேலும், சில கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு கோவை மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 327ன்படி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களிலிருந்து காலி செய்ய மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் வழங்கப்பட்டும், இதுவரை காலி செய்யாதவர்கள் வரும் 20ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. தவறும் பட்சத்தில், வரும் 21ம் தேதி முதல் காவல்துறையினர் உதவியுடன் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும், என மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கோவை பெரியகடை வீதியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும், என அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பின், நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை காலி செய்ய வேண்டும், என வலியுறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசாரின் உதவியுடன் அவர்களது கடைகள் காலி செய்யப்பட்டு 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.