பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக வழங்க வேண்டும் - சத்குரு

கோவை: மக்கள் நலனுக்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க வேண்டும், என்று, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

கோவை: மக்கள் நலனுக்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க வேண்டும், என்று, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தை கூடியவிரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் மத்திய, மாநில அரசுகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெங்களூரு டெக் சும்மிட் (BengaluruTech Summit 2020) என்ற தொழில்நுட்ப மாநாடு ஆன்லைன் வாயிலாக சமீபத்தில் நடந்தது. 

இதில், சிறப்புரை ஆற்றிய சத்குரு கொரோனா தடுப்புமருந்து தொடர்பாக பேசியதாவது:

கொரோனா தடுப்பு மருந்தை பெற்று கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன். தங்கள் உயிரை பணயம் வைத்து களப்பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு மருந்தை முதலில் வழங்க வேண்டும். 

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகி ஆபத்து நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தவுடன், அதில் ஊழல் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. இதை தடுப்பதற்கு பொருளாதார நிலையில் வசதியாக இருப்பவர்கள் அதை குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கும் விதமாக தடுப்பு மருந்துக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். மேலும், அதில் இருந்து கிடைக்கும் நிதியை பயன்படுத்தி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் அரசின் செலவுகளும் குறையும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...