கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா அறிகுறிகளான -- சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களை வீடுவீடாக மாநகராட்சி ஊழியர்கள் பரிசோதனை செய்வதை நேரில் பார்வையிட்டார்.
தெற்கு மண்டலம், கோவைப்புதூர் பகுதியில் கழிவு நீர் செல்ல பாதாளசாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர், பார்வையிட்டார்.

தொடர்ந்து, வார்டு எண்.89, சுண்டக்காமுத்தார், வேலாயுதம் பிள்ளை வீதியில் தூய்மைப் பணியாளார்கள் வீடு வீடாக சென்று பொதுமக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்களை ஒழிப்பதற்காக அபேட் மற்றும் பிளீச்சிங் பவுட்களை தண்ணீர் தொட்டிகளில் தெளிக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், அப்பகுதி மக்களிடம் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், மழைநா் வடிகால் கால்வாய்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், எனவும் அறிவுறுத்தினார்.

அடுத்து, வார்டு எண்.91க்குட்பட்ட காமாட்சி நகர் 3வது தெரு வார்டு எண்.93 இ.பி.காலனி, வார்டு எண்.92க்குட்பட்ட பெருமாள் சாமி நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டும் தொடர்ந்து, வார்டு எண்.93க்குட்பட்ட ஜெயா நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சாலைப்பணிகள் நடைபெற்று வருதையும் பார்வையிட்டார். மேலும், அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு
உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மண்டல உதவி ஆணையாளர் தி.ரா.ரவி (தெற்கு), செயற்பொறியாளர் ஞானவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (பாதாள சாக்கடை திட்டம்), அண்ணாதுரை, உதவி பொறியாளர், சுந்தர் ராஜன், மண்டல சுகாதார அலுவலர், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.