பாஜகவின் வடநாட்டு அரசியலை பெரியார் நாடு அனுமதிக்காது; வேல் யாத்திரைக்கு எதிராக பெரியார் கூட்டு இயக்கத்தினர் பொள்ளாச்சியில் போராட்டம்..!

பொள்ளாச்சி: பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் பண்பாட்டுக் கழக கூட்டு இயக்கங்கள் சார்பில் தலைமை தொலைபேசி அலுவலகம் முன்பு அம்பேத்கர் உருவில் தந்தை பெரியார் கைத்தடி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி: பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர்  பண்பாட்டுக் கழக கூட்டு இயக்கங்கள் சார்பில் தலைமை தொலைபேசி அலுவலகம் முன்பு அம்பேத்கர் உருவில் தந்தை பெரியார் கைத்தடி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மத வன்முறையை தூண்டுகின்ற வகையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. வேல் யாத்திரைக்கு நீதிமன்றம் தடை விதித்த பிறகும் யாத்திரை என்ற பெயரில் மதவெறி வன்முறையை தூண்டுகின்ற யாத்திரைக்கு இரட்டை வேடம் போட்டு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது, என்று குற்றம் சாட்டினார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு யாத்திரையை நடத்தும் பிஜேபியின், அராஜகப் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும், பக்தி - அரசியலை பிரித்துப் பார்க்கின்ற தன்மை இருக்கிறது, இதை சீர்குலைத்து பக்தியின் பெயரால் அரசியல் செய்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் வடநாட்டு அரசியலை பெரியார் நாடு அனுமதிக்காது, என்று கோசங்கள் எழுப்பினர்.

மேலும், யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை என்றால்,  தமிழகம் முழுவதும் தந்தை பெரியார் கைத்தடி ஊர்வலம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.



பின்னர், தடையை மீறி கைத்தடி ஊர்வலம் நடத்த முயன்ற 50 க்கும் மேற்பட்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...