வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவைகளில், காட்டுக்கோழி, பன்றி, மான், முயல் போன்றவைகளை பிடிப்பதற்காக கன்னி சுருக்கு வைக்கும் பழக்கம் உள்ளது. இந்த சுருக்கு வலைகளில், ஒரு சில சமயங்களில் சிறுத்தைபுலி மாட்டி உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இதைத் தடுப்பதற்காக, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட சிறுகுன்றா தேயிலை தோட்டம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட கன்னி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், வடமாநில தேயிலை தொழிலாளி முஷில் நகசியா (32) மற்றும் ஹசிராம் (32) ஆகிய இருவரும், கன்னி வைத்து தெரியவந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கும் தலா ரூ 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து, மானம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் செய்தியாளரிடம் பேசுகையில், தேயிலைத் தோட்ட பகுதியில் நடைபெறும் குற்றங்களுக்கு அந்தந்த தேயிலை தோட்ட மேலாளர்கள் தான் முழு பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும் என்றும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரித்துள்ளார்.