கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒருவரான வீரமணி என்பவர் நீதிமன்ற ஜாமினில் கோவை மத்திய சிறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தனது மனைவியுடன் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளரை காவல் துறையினர் நிர்பந்தித்து வருவதாகவும், தொடர்ந்து காவல் துறையினர் தன்னை கண்காணித்து வருவதோடு, அடக்குமுறை செய்வதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, காவல் துறையினரை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினார். இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினை ஒன்றையும் அளித்தார்.