கோவை: தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், எதிர்கட்சிகள் நடத்தும் பேரணின் போது கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாகவும், இதனால் தான் நேற்று நடைபெற்ற ஏர் கலப்பை யாத்திரையில் போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கோவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மருதமலை முருகன் கோவிலுக்கு வந்தார் அவருக்கு முன்னால் மாவட்ட தலைவர் மகேஷ் குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், எதிர்கட்சிகள் நடத்தும் பேரணி மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை நாட்டு மக்கள் இன்னும் காங்கிரஸ் கட்சியை விரும்பி வருவதாகவும், இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முக்கிய இடத்தை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் தொகுதி குறித்த உடன்பாடுகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கபடவில்லை எனவும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களே விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சிக்கு இது சவாலான நேரம் என கூறிய அவர், கருத்துக்கள் கூறுவது தவறில்லை அதே நேரத்தில், கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். அது மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநில பொதுச் செயலாளர் செல்வம், கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.