குழந்தைகளைத் தாக்கும் புதிய வைரஸ் நோய்: ரூ.25 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு 14 குழந்தைகள் பூரண குணம் - கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் பூமா தகவல்

கோவை: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகளையும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து வரும் குழந்தைகளுக்கும் மிஸ்&சி என்ற புதிய வைரஸ் தொற்று தாக்குவதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியது.

கோவை: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகளையும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து வரும் குழந்தைகளுக்கும் மிஸ்&சி என்ற புதிய வைரஸ் தொற்று தாக்குவதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியது. 

இதைதொடர்ந்து, மேற்கொண்ட ஆய்வில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கும் மிஸ்&சி வைரஸ் தாக்கப்பட்டு இருந்தது கண்டுப்பிடிக்கபட்டது.

அவர்கள், கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இதில், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் முதல் இதுவரை 17 குழந்தைகள் மிஸ்&சி வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதில், திருப்பூரைச் சேர்ந்த ஒரு வயது சிறுவன் மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள, 14 குழந்தைகள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல பிரிவு துறை தலைவர் டாக்டர் பூமா கூறியதாவது:

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 17 குழந்தைகள் மிஸ்&சி வைரசுக்கு அனுமக்கப்பட்டனர். அவர்களில், 14 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மிஸ்&சி நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.2 முதல் 3 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. சில நேரங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 3 லட்சத்துக்கு மேலும் செலவு ஆகிறது. 

இதுவரை, மிஸ்&சி வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.25 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனையில், 2 சிறுவர்கள் மட்டும் மிஸ்&சி வைரஸ்க்கான சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள், என்று மருத்துவர் பூமா தெரிவித்தார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...