திருப்பூர்: டிசம்பர் 5-ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவடையும்போது, ஊழல் திமுகவிற்கு எதிரான சூரசம்ஹாரம் துவங்கும் என திருப்பூரில் வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வேல் யாத்திரை மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வித்யாலயா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, வேல் யாத்திரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் மேடையில் ஏறாமல் மேடைக்கு முன் புறமாக ஆட்டோவில் ஏறி நின்று தொண்டர்களிடையே பேசினார்கள்.

அப்போது, பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், வேல் யாத்திரை என்பது பாஜகவின் போராட்டமோ, அரசியல் போராட்டமோ இல்லை எனவும் இது தமிழனின் தன்மானத்தை காக்கும் போராட்டம் என்றார். வேல் யாத்திரை மூலம், 8 கோடி தமிழர்களும் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வேல் யாத்திரைக்கு எதிராக பெரியார் தடியடி யாத்திரை நடத்தியவர்கள் மீது வன்முறையை தூண்டும் பிரிவுகளின் கீழ் காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
வேல் யாத்திரை டிசம்பர் 5-ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும்போது ஊழல் திமுகவிற்கு எதிரான சூரசம்ஹாரம் துவங்கும், என்று ஆவேசமாக பேசினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகை குஷ்பு, தமிழகத்திற்கு பாஜக இதுவரை 67 ஆயிரம் கோடிக்கு திட்டம் கொடுத்துள்ளதாகவும், மக்களை சந்திக்காமல் வெளிநாட்டுக்கு போய் ஓய்வு எடுக்கும் தலைவர் இல்லை மோடி, என்றார்.
திமுகவில் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பிய குஷ்பு , வேல் யாத்திரையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் கூட கலந்து கொண்டு வருவதாக பேசினார்.
பாஜகவின் வேல் யாத்திரை மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டபோது காவலர்களுக்கும் பாஜகவினருக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டது.