நீர் நிலைகளில் மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை: கோவை புதுக்காடு அருகே ஓடும் நொய்யல் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை பகுதியில், மது அருந்த வரும் நபர்கள் குடித்துவிட்டு அங்கேயே மதுபாட்டில்களை போட்டுவிட்டு செல்வதால், வனவிலங்குகளுக்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



கோவை: கோவை புதுக்காடு அருகே ஓடும் நொய்யல் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை பகுதியில், மது அருந்த வரும் நபர்கள் குடித்துவிட்டு அங்கேயே மதுபாட்டில்களை போட்டுவிட்டு செல்வதால், வனவிலங்குகளுக்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் புதுக்காடு பகுதியில் நொய்யல் ஆற்றில் காணப்பட்ட மதுபாட்டில்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான ஆர்வலர்கள் கலந்துகொண்டு உடைந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் குப்பைகளை அகற்றினர்.

இதுகுறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி மணிகண்டன் கூறியதாவது:- 

குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஒவ்வொரு வாரமும் ஒரு நீர்நிலையை தேர்வு செய்து குப்பைகளை அகற்றி, தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில், 178 வது வார்டு பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று படுகையில், நேற்று தூய்மை பணி நடைபெற்றது. 

இங்கு, வந்து மது அருந்தும் நபர்கள் மதுபாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். அந்த உடைந்த மது பாட்டில்கள் வனவிலங்குகளின் கால்களில் காயத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, நீர் நிலைகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...