கொரோனா அச்சம்: போதிய பயணிகள் இல்லாததால், கோவை விமான நிலையத்தில் 1 முதல் 3 விமானங்கள் தினசரி ரத்து..!

கோவை: கொரோனா அச்சம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால், கோவையில் விமான சேவை ரத்து செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகளிடையே அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவை: கொரோனா அச்சம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால், கோவையில் விமான சேவை ரத்து செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகளிடையே அதிருப்தி அடைந்துள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் தளர்வு அறிவிக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும், மக்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் முழுமையாக விலகாத நிலை நிலவி வருவதால், விமானத்தில் பயணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். 

இதனால், டிக்கெட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தும் குறைவாகவே நடைபெறுகிறது. தினமும் குறைந்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முன்வருவதால், கோவையில் தினசரி ஒன்று முதல் மூன்று விமானம் வரை ரத்து செய்வது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. 

இது குறித்து, கோவை சர்வதேச விமான நிலைய அதிகாரி கூறியதாவது:- 

கொரோனா தொற்று பயத்தில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. குறிப்பாக, வெளி இடங்களுக்கு பயணம் செய்வதில், மக்கள் மத்தியில் இன்னும் அச்ச உணர்வு இருக்கிறது. ஆனால், போதிய பயணிகள் வராததால் டிக்கெட் விற்பனையில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி சில விமான சேவைகளை ரத்து செய்ய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

கோவை விமான நிலையத்தில் தினமும் ஒன்று முதல் மூன்று விமானங்கள் வரை ரத்து செய்யப்படுகின்றன, என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, செவ்வாய் கிழமைகளில் விமான சேவை ரத்து செய்யப்படுவது அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில், தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மோசமான வானிலை காரணமாக வேறு நகர விமான நிலையங்களுக்கு மாற்றி விடுதல், ரத்து, காலதாமதம் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. 

எனவே, இதை கருத்தில் கொண்டே பயணிகள் பயணத்தை திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, கடைசி நேரத்தில் விமான சேவை ரத்தால் அடையும் மன உளைச்சலை பயணிகள் தவிர்க்கலாம், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...