பித்தளை நகைகளை தங்க முலாம் பூசி விற்று வந்த கும்பலை சேர்ந்த மூவர் கைது; ஆந்திரா விரைந்துள்ள சூலூர் போலீஸார்..!

கோவை: சூலூர் அருகே பித்தளை நகைகளை தங்க முலாம் பூசி விற்ற பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை: சூலூர் அருகே பித்தளை நகைகளை தங்க முலாம் பூசி விற்ற பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவையை அடுத்த சூலூர் அருகே ஒரு தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரு கும்பல் பித்தளை நகைகள் மீது தங்க முலாம் பூசி விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கருமத்தம்பட்டி போலீஸ் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, உத்தரவின் பேரில் சூலூர் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சூளுரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். 

அப்போது, அங்குள்ள ஒரு தோட்டத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் வசித்து வருவதாகவும் அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. உடனே, போலீசார் அவர்கள் வசித்த வீட்டை சுற்றி வளைத்தனர். அதையறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே, உஷாரான போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். 

விசாரணையில், அவர்கள் மூவரும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த உபதுல்லா சீனிவர்ஸ் அவருடைய மனைவி உப துல்லா ரமணா மற்றும் பட்டா சுரேஷ் என்பதும் அவர்கள் கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் பித்தளை நகைகள் மீது தங்க முலாம் பூசி வைத்து விற்பனை செய்ததும், அடகு வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்தது, சூலூர் போலீஸார் 420 சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

போலீசாரின் தொடர் விசாரணையில் கைதான மூன்று பேரின் கூட்டாளிகள் சிலர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக உறுதியானது. அதை தொடர்ந்து அவர்கள் கூட்டாளிகளை பிடிக்க சூலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்து உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...