கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை..! லேப்டாப், பணம் திருட்டு

கோவை: கோவை மாவட்டம், அன்னூர் குமரன் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35), தனியார் நிறுவன மேனேஜர். சம்பவத்தன்று, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது தெரியவந்துள்ளது.

கோவை: கோவை மாவட்டம், அன்னூர் குமரன் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35), தனியார் நிறுவன மேனேஜர். சம்பவத்தன்று, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது தெரியவந்துள்ளது. 

அப்போது, உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் ரூ 10,000 மற்றும் மேஜையில் இருந்த லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதே போன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஜெகநாதன் என்பவர் வீட்டையும் உடைத்து பீரோவில் இருந்த ரூ 14,000 மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து, லோகநாதன் மற்றும் ஜெகநாதன் அன்னூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்தது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...