உதகையில் வேல் யாத்திரை: பாஜக கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது

நீலகிரி: உதகையில் வேல் யாத்திரைக்கு முற்பட்ட பாஜக துணைத்தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் பாஜக கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


நீலகிரி: உதகையில் வேல் யாத்திரைக்கு முற்பட்ட பாஜக துணைத்தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் பாஜக கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தமிழகத்தில் முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கும், வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார். ஆனால், வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி கடந்த 6-ந் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் சார்பில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் வேல் யாத்திரை ஏடிசி பகுதியில், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.



கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர். இதில் மாநில துணைதலைவர் நாயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வேல் யாத்திரை குறித்து பொதுமக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது எனவும், வரும் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் தமிழ்நாட்டில் வெற்றி பெறும், என்றார்.

மேலும், நடைபெற இருக்கும் தேர்தல் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சவாலானதாக அமையும் என்றும். திமுக போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது குற்றம்சாட்ட முற்படுகின்றனர். திராவிட கட்சிகளின் 60 ஆண்டு கொள்கையில், ஆன்மீகக் கொள்கைகள் பிடித்து ஏராளமானோர் பாஜகவில் தற்பொழுது இணைந்து வருகின்றனர், என்று கூறினார்.

மேலும், பாஜகவினர் நடத்திய வேல்யாத்திரையின் காரணமாக உதகை ஏடிசி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனையடுத்து, தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முற்பட்ட பாஜகவின் மாநில துணை தலைவர் நைனார் நாகேந்திரன், மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் பாப்பண்ணன், உதகை நகர தலைவர் பிரவீன், குன்னூர் நகர தலைவர் குங்குமராஜ், மகளிரணி, தொழிலாளர் அணி உட்பட பலர் கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...