திருப்பூர்: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 7 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும், என திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோம்பைத்தோட்டம் பகுதியில் நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கி இஸ்லாமியர்கள் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.