கோவை: கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள உணவகத்தில் வாங்கி சென்ற உணவு பொட்டலத்தை பொட்டலத்தில் இறந்த எலி இன்று இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள உணவகத்தில் வாங்கி சென்ற உணவு பொட்டலத்தை பொட்டலத்தில் இறந்த எலி இன்று இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உடுமலைப்பேட்டையை சேர்த்த திவ்யா என்பவரின் சகோதரர் கார்த்திகேயன், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், இன்று காலை திவ்யா, கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டேஸ்டி என்ற உணவகத்தில் அவரது, தம்பிக்கும் ஆப்பம், சாம்பார் ஆகியவற்றை வாங்கி சென்றுள்ளார்.
பின், அவரது உடல் நலக்குறைவுடைய தம்பிக்கு அதை சாப்பிட கொடுத்துள்ளார்.
சாப்பிட்ட பின்னர் மீதி இருந்த சாம்பாரில் பார்த்த போது அதில் எலி ஒன்று இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, இறந்த எலி கிடந்த சாம்பாருடன் ஹோட்டலில் வந்து முறையிட்ட போது, உரிய பதில் அளிக்காமல் எலி இருந்த பொட்டலத்தை வாங்கி வைத்து கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் எற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பந்தய சாலை காவல்துறையினர் சாம்பாரில் எலி கிடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை மேற்கொண்டனர். சாம்பாரில் எலி கிடந்தது குறித்த புகார் வந்திருப்பதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பரிசோதனையில் சம்பாரில் எலி இருந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.