திருப்பூர்: தமிழகம் முழுவதும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் சூழ்நிலையில், தடையை மீறி தினந்தோறும் வேல் யாத்திரை பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருவதை கண்டித்தும், திருப்பூரில் இன்று நடைபெறவுள்ள பொது கூட்டத்தை கண்டித்தும், திருப்பூர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பெரியார் தடி ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில், வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதால், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பெண்கள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.

இதனால், காவல் துறையினருக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.