வால்பாறையில் பல பேரை காவு வாங்கிய கூழாங்கல் ஆற்று மரணக் குழியை அடைக்க நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை

கோவை: வால்பாறை நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது கூழாங்கல் ஆறு. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து ரசித்து, குளித்து செல்கின்றனர்.


கோவை: வால்பாறை நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது கூழாங்கல் ஆறு. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து ரசித்து, குளித்து செல்கின்றனர்.

இந்த ஆற்றின் இடது கரையில் ஆழம் அதிகமாக உள்ளதோடு சுழலும் உள்ளது. இதன் காரணமாக, இப்பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், தடையை மீறி இங்கு பல பேர் குளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூழாங்கல் ஆற்று பகுதியில் கடந்த வாரம் திருப்பூர் சாமுண்டிபுரம் நகரைச் சேர்ந்த சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் விஸ்காம் மூன்றாம் ஆண்டு கல்லூரி பயின்று வரும் ஹரிஷ் என்ற மாணவர் தன்னுடைய நண்பர்களுடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்தார்.

அப்போது, ஆற்றில் குளிக்கச் சென்ற ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



இதுவரை, சுமார் 20 பேர் இப்பகுதியில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த வால்பாறை நகராட்சி ஆணையாளர் க. பவுன்ராஜ், ஆற்றின் ஆபத்தான பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதியில், சுழல் இருப்பதைக்கண்டு அப்பகுதியில் ராட்சத பாறைகளைக் கொண்டு சூழலை மூட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



அதன்படி, அந்தப் பகுதியில் ஜே.சி.பி எந்திரம் மூலமாக, ராட்சத பாறைகள் தண்ணீரில் போடப்பட்டு குழிகள் அடைக்கப்பட்டு வருகிறது.

பல உயிர்களை காவு வாங்கிய, கூழாங்கல் ஆற்றின் சுழல் பகுதி, தற்போது மூடப்படுவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...