கோவையில் குழந்தையுடன் மாயமான மனைவி குறித்து போலீசாரிடம் கணவர் புகார். கள்ளக்காதலனுடன் சென்றாரா..? என்று விசாரணை

கோவை: விஜயகுமார் (29), அவரது மனைவி மீரா (24) கோவை இராமநாதபுரம், சூரியன் நகரில் வசித்து வந்தனர்.


கோவை: விஜயகுமார் (29), அவரது மனைவி மீரா (24) கோவை இராமநாதபுரம், சூரியன் நகரில் வசித்து வந்தனர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, ஐந்து வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன், மீராவிற்க்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது, என்று கூறப்படுகிறது.

விஜயகுமார் வேலைக்கு சென்றுள்ள நேரத்தில், அவர்கள் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விவகாரம், விஜயகுமாருக்கு தெரியவரவே, அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த இளம்பெண் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலுடன் இரண்டு மாதங்களாக வசித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு அறிவுரை கூறி, கணவருடன் சேர்த்து வைத்தனர். அப்போது, மீராவிற்கு அங்குள்ள ஒரு கால் டாக்சி டிரைவர் ஒருவர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த மீரா, தனது கணவரிடம், மகளை அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வராததால், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை.

இதுகுறித்து, விஜயகுமார் மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தரும்படி, கோவை ராமாநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மீரா கால் டாக்ஸி டிரைவருடன் வீட்டைவிட்டு சென்றது தெரியவந்தது.

இவரது, செல்போன் டவரை ஆய்வு செய்தபோது அவர்கள் ஓசூரில் இருப்பதாக காட்டியது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...