கோவை: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கோட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதற்காக, சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சிறப்பு பஸ்கள் இயக்கப்பட 8 நாட்களில் மொத்தம் 27.11 லட்சம் பயணிகள் சிறப்பு பண்டிகை கால பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம், கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் ரூபாய் 16.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் ரூபாய் 31.38 கோடி வருவாய் கிடைத்தது. அப்போது, ஒரு கோடியே 60 லட்சம் பேர் பஸ்களில் பயணித்தன. இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால், சிறப்பு பஸ்களும் குறைவாகவே இயக்கப்பட்டன.
இதனால், சென்ற ஆண்டை காட்டிலும் கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு, இந்த ஆண்டு குறைவாகவே வருவாய் கிடைத்துள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.