கோவையில் நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை

கோவை: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பல்லடம் வடுகம்பாளையம் பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (70), நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், இவரது மனைவியும் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

இதனால், ராஜகோபால் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று, ராஜகோபால் பல்லடத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் நெல்லித்துறை பவானி ஆற்று பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அவர் அங்கு யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் 174 சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல், கோவை ஆனைமலை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40), சமையல் தொழிலாளி. நேற்று, இவர் கருப்பராயன் கோவில் பகுதியில் உள்ள ஆழியார் ஆற்றில் துணி துவைப்பதற்காக சென்றார். அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், அவர் தடுமாறி ஆற்றில் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 176 பிரிவின் கீழ் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...