கோவை: கோவையில், ஒரே நாளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் சார்பில் பேரணிகள் நடப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாத வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவையில், ஒரே நாளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் சார்பில் பேரணிகள் நடப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாத வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் வேல் யாத்திரை
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 6ஆம் தேதி முதல் திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பாரதிய ஜனதா மாநில தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று 22ஆம் தேதி நீலகிரயில் வேல் யாத்திரை நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வேல் யாத்திரை பாரதிய ஜனதா தலைவர், முருகன் தலைமையில் தொடங்குகிறது. அங்கிருந்து, புறப்படும் யாத்திரை மேட்டுப்பாளையம் வழியாக துடியலூரில் முடிவுக்கு வருகிறது.
அங்கு பாரதிய ஜனதா தலைவர் முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை முடித்துக் கொண்டு, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் நடக்கும் யாத்திரையில் பங்கேற்கிறார். தொடர்ந்து, கோவையில் நாளை மாலை 4 மணி மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வேல் யாத்திரை தொடங்குகிறது.
இதில் மாநிலத்தலைவர் முருகன் கலந்துகொண்டு யாத்திரையை தொடங்கி வைக்கிறார். அதன்படி, யாத்திரை கோவை வடக்கு நகர் பகுதி வழியாக சிவானந்தா காலனி வந்து அடையும்.
இந்த யாத்திரையில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் ஏர்கலப்பை பேரணி
காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று கோவை கருமத்தம்பட்டியில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டில், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் தினேஷ், குண்டுராவ் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத், பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், டாக்டர் செல்வகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற தலைவர் கே .ஆர் ராமசாமி மற்றும் மாநில மூத்த முன்னணி தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.
மாநாடு ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநில பொதுச் செயலாளர் டி. செல்வம், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி. எம். சி மனோகரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஆர். பி முருகேசன். பி.எம் ரங்கசாமி உட்பட பலர் மாநாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவையில், ஒரே நாளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் சார்பில் பேரணிகள் நடப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாத வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.