கோவை: கோவைபுதூர், மாலை நகரைச் சேர்ந்தவர் முகைதீன் இவரது மகள் சர்மிளா என்கிற தனுஜா ஸ்ரீ (13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், தனுஸ்ரீ வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்துள்ளார். இதனால், அவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். நேற்று காலை வழக்கம்போல் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், சர்மிளா மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாலையில் பெற்றோர் வீடு திரும்பிய போது, மகளை காணாததால், அச்சம் அடைந்தனர். அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், மீண்டும் வீட்டிற்கே வந்தனர். அப்போது, வீட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது.
அதில், நீங்கள் என்னை அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பதால் நான் பக்கத்து வீட்டில் வசிக்கும் 20 வயது பெண்ணுடன் வீட்டைவிட்டு செல்வதாக எழுதி இருந்தது. மேலும், அவர்களுடன் பக்கத்து வீட்டருகே வசித்து வரும் ஷியாம் (14), 8-ம் வகுப்பு மாணவனும் வந்ததாக எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவர்களது மகள் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனை, பக்கத்து வீட்டில் வசித்த பெண் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த 20 வயதுடைய பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் ஊட்டி அருகே இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கோவை போலீசார் ஊட்டிக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.