கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக் கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளா் அவர்கள் தெரிவித்ததாவது:-
கோவை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு பரவுதலைத் தடுக்க தினந்தோறும் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கழிவு செல்லும் இடங்களில் கொசு மருந்து தெளிப்பதை அதிகப்படுத்திட வேண்டும் எனவும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நீர்த்தேக்கத் தொட்டிகளில் அபேட் மருந்து
ஊற்ற வேண்டும், தேவையற்ற பொருட்களை அகற்றப்பட வேண்டும் என்றார்.
அதேபோல, பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்திட வேண்டும், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் கொசு ஒழிப்புப்பணியாளர்கள் மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும், டெங்கு பரவுதலை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களிடம் மாநகராட்சி ஆணையாளா் தெரிவித்தார்.
தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும், இவ்வாறு கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்த ஆணையர் அவர்கள், மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை கேட்டறிந்தார்.
பின்னர், கள பணியாளர்கள் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் மற்றும் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறியப்படும் முறைகளை குறித்தும், மண்டல வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்தும் கேட்டறிந்த ஆணையாளா் அவர்கள், கொரோனா தொற்று பரவுதலை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது மாநகரப்பொறியாளா் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட்சிட்டி) சரவணக்குமார், நகர்நல அலுவலர் மரு.ராஜா, செயற்பொறியாளர் ஞானவேல், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர் (தூய்மை இந்தியா திட்டம்) திருமால், அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.