கோவை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும்‌ மழையினால்‌ ஏற்படும்‌ இடர்பாடுகளை கையாள்வது குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வது மற்றும்‌ மழையினால்‌ ஏற்படும்‌ இடர்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வது மற்றும்‌ மழையினால்‌ ஏற்படும்‌ இடர்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சியில்‌ பருவமழையின் போது நீர்தேங்கும்‌ நிலையில்‌ உள்ள இடங்களில்‌ மற்றும்‌ சாலையோரங்களில்‌ நீரை வெளியேற்ற மோட்டார்‌ பம்ப்‌ மூலம் நீரை வெளியேற்றும்‌ வாகனங்களை தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. அனைத்து மண்டலங்களிலும்‌ ஜே.சி.பி. மற்றும்‌ பொக்லைன்‌ தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. பருவ மழையின்போது காற்று மற்றும்‌ மழையினால்‌ மரங்கள் விழும்போது அவற்றை வெட்டி அப்புறப்படுத்த மரம்‌ அறுக்கும்‌ கருவிகளை தயார் நிலையில்‌ வைத்திருக்க வேண்டும் என்றார்.

அதேபோல, மழையினால்‌ ஏற்படும்‌ தொற்று நோய்களை பரவாமல்‌ தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள்‌ மற்றும்‌ மருத்துவ முகாம்கள்‌ தயார் நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. நீர் நிலைகளில்‌ ஏற்படும்‌ உடைப்புகளை சரிசெய்ய தேவையான மணல்‌ மூட்டைகளை தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. பருவ மழையின்போது பாதிக்கப்படும்‌ மக்கள்‌ தங்குவதற்கு ஏதுவாக பள்ளிகளை தயார் நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. அவ்வாறு தங்க வைப்பவர்களுக்குத்‌ தேவையான உணவுகளை தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌ என்று தெரிவித்தார்.

மேலும், மழையின் போது மின்கம்பங்கள்‌, கேபிள்கள்‌, தாழ்வான மின்கம்பங்கள்‌ விழும்‌ சூழலில்‌ உடனடியாக அகற்றும்‌ வண்ணம்‌ தேவையான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌. சாலையோரங்களில்‌ திறந்திருக்கக்கூடிய மழைநீர் செல்லும்‌ கால்வாய்கள்‌ ஏதாவது திறந்திருந்தால்‌ மூடிவைக்க தேவையான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌. குழிகளை பாதுகாப்பாக மூடப்பட வேண்டும்‌. தூர்வாராத மழைநீர் ‌ கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும்‌. மழைநீர் செல்லும்‌ மழைநீர் வடிகால்‌ கால்வாய்களில்‌ யாரும்‌ குப்பைகளை கொட்டக்கூடாது. ஆபத்தான கட்டிடங்களில்‌ யாரும்‌ வசிக்கக்கூடாது, அனைத்து துறை அலுவலர்களும் மழைக்காலத்தின் போது 24 மணி நேரமும் பணிகளை கண்காணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது மாநகரப்பொறியாளா்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ (ஸ்மார்ட்சிட்டி) சரவணக்குமார்‌, நகர்நல அலுவலர்‌ மரு ராஜா, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, அனைத்து மண்டல உதவி ஆணையார்கள்‌, உதவி செயற்பொறியாளா்கள்‌, சுகாதார ஆய்வாளர்‌ (தூய்மை இந்தியா திட்டம்‌) திருமால்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...