கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்துள்ள கட்டிடங்களை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளன.

கோவை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திட மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள கட்டிடங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்றது.
அதில், 223 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன என அதிகாரிகள் கண்டறிந்தனர். தற்போது இந்த கட்டிடங்களை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழுதடைந்துள்ள தனியார் கட்டிடங்களில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை உடனே இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்களில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது,’’ என்றார்.