கோவை விமானநிலைய விரிவாக்கம் நிலம் கையகப்படுத்த ரூ.263 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தை ரூ.5000 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 2017ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது.

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தை ரூ.5000 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 2017ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. 

இதனிடையே, நிலம் கையகப்படுத்த இதுவரை ரூ.263 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். கோவை சர்வதேச விமானநிலையத்தில், தற்போது 9,500 அடி ஓடுதளம் உள்ளது. சர்வதேச விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து செல்ல கூடுதல் ஓடுதளம் தேவைப்படுகிறது. எனவே, கோவை விமானநிலையத்தை 12,500 அடி ஓடுதளம் கொண்ட விமானநிலையமாக விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்காக, தற்போது விமானநிலையம் உள்ள பகுதியில் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 134.2 ஏக்கர் பாதுகாப்பு துறைக்கும், 28 ஏக்கர் புறம்போக்கு நிலமாக உள்ளது. இந்த நிலங்கள் உடனடியாக கையகப்படுத்தப்பட்டது. மீதமுள்ள நிலங்களில் வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. 

இந்த நிலத்தை கையகப்படுத்த குடியிருப்புகளுக்கு சதுர அடிக்கு ரூ.1,500 யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.900-மும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை விமானநிலைய விரிவாக்கத்திற்கு நில இழப்பீடு தொகை வழங்க ரூ.2,081 கோடி நிதி தேவைப்படுகிறது. இதில், நில உரிமைதாரர்களுக்கு வழங்க ரூ.263 கோடி நிதி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இதுவரை ரூ.168 கோடி சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது."

மேலும், நில குத்தகைதாரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் ரூ.95 கோடி வழங்கப்படாமல் உள்ளது, என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...