கோவை: தென்மேற்கு பருவமழையால் கோவையில் 0.10 முதல் 2.18 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரம் கட்டுப்பாட்டில் உள்ள 133 திறந்தவெளி கிணறுகள், 32 ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அளவிடப்படுகிறது. மாதம் தோறும் நிலத்தடி நீர் மட்டம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்படுகிறது.
கோவையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக பெய்ததால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, தொண்டாமுத்தூர், சூலூர் உள்பட 12 வட்டாரங்களிலும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிணறுகளில் மாதம்தோறும் நிலத்தடி நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது. அதன்படி, நடப்பு அக்டோபர் மாதத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 3 வட்டாரங்களை தவிர்த்து மற்ற 9 வட்டாரங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக மாவடத்தில் கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 0.10 முதல் 2.18 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சுல்தான் பேட்டையில் 2.18 மீட்டர், மதுக்கரையில் 2 மீட்டர், தொண்டாமுத்தூரில் 1.78 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
மேலும் நிலத்தடி நீர் மட்டம் அளவீடு செய்வதற்கு மின்னணு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, டேப் மூலம் கிணறுகளில் நீர் மட்டம் அளவிடப்பட்டு வருகிறது. பரிசோதனை முறையாக 10 சதவீத கிணறுகளில் நீர் மட்டத்தை அளவவிடும் மின்னணு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலத்தடி நீர் மட்டத்தை துல்லியாமாக எளிதாகவும் பெறமுடியும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.