கோவையில் விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி!

கோவை: கோவையில் விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.


கோவை: கோவையில் விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

கோவை வேடப் பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை (37), கூலித்தொழிலாளியான இவர் கடந்த மார்ச் 24-ம் தேதி 2016-ம் ஆண்டு கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது கோவை அரசு டவுன் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வீரமலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அரசுப் போக்குவரத்து கழகம் உரிய நஷ்ட ஈடு வழங்கக் கோரி கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி 2019-ம் ஆண்டு வீரமலைக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 10 லட்சத்து 64 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால், இந்த உத்தரவின்படி வீரமலைக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் வட்டியுடன் சேர்த்து 13 லட்சத்து 46 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி சிவானந்தா காலனியில் இருந்து இயங்கும் 5 நம்பர் அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...