கோவை சூலூர் அருகே டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளிவிட்டு காப்பர் கேபிள் நூதன முறையில் திருட்டு! போலீசார் விசாரணை

கோவை: கோவை சூலூர் அருகே டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளிவிட்டு காப்பர் கேபிள் நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சூலூர் அருகே டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளிவிட்டு காப்பர் கேபிள் நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சூலூர் அருகே உள்ள அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளிவிட்டு அதிலிருந்த காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் ஒரு இன்ஜினியரிங் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு தனியாக மின் பாதை அமைக்கப்பட்டு மின்சாரம் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், தொழிற்சாலை கடந்த ஆறு மாதங்களாக செயல்படுவது இல்லை. தொழிற்சாலை அருகே மின்மாற்றி எனப்படும் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த ட்ரான்ஸ்ஃபார்மர் அமைந்திருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த ட்ரான்ஸ்பார்மர்க்கு செல்லும் மின் இணைப்பைத் துண்டித்து விட்டு டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி அதிலிருந்த காப்பர் வயர்களை திருடி சென்றுள்ளனர்.

இதனை நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அரசூர் மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் கீழே தள்ளப்பட்டு அதிலிருந்த காப்பர் வயர்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக அரசூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சூலூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் பாதையில் உள்ள டிரான்ஸ்பார்மரிலேயே காப்பர் ஒயர் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...