கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முகாமிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பரிசோதனை முகாமிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பரிசோதனை முகாமிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தற்போது தினமும் 200க்கும் குறைவான நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கோவை மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் பங்கேற்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் மிகக் குறைந்த அளவிலான பேர் மட்டுமே முகாம்களில் பங்கேற்று சிகிச்சை பெறுகின்றனர். அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை காய்ச்சல் முகாம்களில் மொத்தம் 92 ஆயிரத்து 907 பேர் பங்கேற்றுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

நகர் பகுதியில் தினமும் 100 முதல் 120 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. தவிர வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ள நிலையிலும் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்காமல் தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், முகாமிற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த அக்டோபரில் 1.95 லட்சம் பேரும், செப்டம்பரில் 3.55 லட்சம் பேரும், முகாமில் பங்கேற்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது 92 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். மேலும் தற்போது பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் 13 உள்ளது. தினமும் 2,500 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...