கோவையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

கோவை: கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.


கோவை: கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் பிள்ளையார்புரம் செந்தமிழ் நகர் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கஸ்தூரி காலனியை சேர்ந்த முகம்மது உசேன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதுபோல, செட்டிபாளையம் ரோடு ஜி.டி டேங்க் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்ற சுகுணா புரத்தை சேர்ந்த பாலா (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...