கோவை விமான நிலையத்தில், ரூபாய் 4.82 கோடி மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்..! புது விதமான ரசாயனம் தடவி கடத்தல் முயற்சி அம்பலம்..!

கோவை: தீபாவளி நாளில் ரூபாய் 4.82 கோடி மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புது விதமான ரசாயனம் தடவி கடத்தல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது அம்பலம் ஆகியுள்ளது, என கோவை நுண்ணறிவு பிரிவு வருவாய் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: தீபாவளி நாளில் ரூபாய் 4.82 கோடி மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புது விதமான ரசாயனம் தடவி கடத்தல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது அம்பலம் ஆகியுள்ளது, என கோவை நுண்ணறிவு பிரிவு வருவாய் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவை நுண்ணறிவு பிரிவு வருவாய் இயக்குனரகம் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது, அதில் கூறியுள்ளதாவது:-

தீபாவளி அன்று வருவாய் நுண்ணறிவு பிரிவினர் கோவை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் அதிகாலை 5.30 மணி அளவில் கோவை வந்தடைந்தது. அப்போது, பயணிகள் முறைப்படி அவர்களுடைய உடைமைகள் மற்றும் சூட்கேஸ் ஆகியவற்றை ஸ்கேனர் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்த பிறகு அவர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு கடக்க முயன்றனர்.

அப்போது, பயணிகளில் 10-க்கும் மேற்பட்ட நபர்களின் முகத்தில் பதட்டம் தெரிந்ததால், துணை இயக்குனர் சதீஷின் உத்தரவின்பேரில் மொத்தம் 15 நபர்கள் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 24 கேரட் தங்கத்தை மொத்தம் 6 கிலோ அளவிலானது அவற்றை பேஸ்ட் போல் மாற்றி அதன்மீது கெமிக்கல் தடவி மலவாய் பகுதியில் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல, மற்ற நபர்களிடம் 24 தங்க செயின்கள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், ஐ போன் மற்றும் ட்ரோன் கேமரா வந்திருந்தனர். இதன் மதிப்பு 53 லட்சம் ஆகும். மொத்த தங்கத்தின் மதிப்பு 3.26 கோடியாகும்.



இதில், ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அவர்கள் கொண்டுவந்த பொருள்கள் மீது ஒருவிதமான ரசாயனத்தை தடவி தங்கத்தை பேஸ்டாக மாற்றி கிரீன் சேனல் என்று சொல்லக்கூடிய சிறப்பு சோதனையிலும் கடந்து, அதன்பிறகு மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேனர் மெஷினிலும் தப்பி கடைசியில் அவர்கள் மாட்டிக்கொண்டது வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த 15 நபர்களும் கோவை வந்து கேரளாவிற்கும், திருச்சிக்கும், சென்னைக்கும், செல்லக்கூடியவர்கள் எனவும் இவர்களிடம் முழு தகவலையும் பெற்றுக்கொண்ட போலீசார் இவர்கள் மீது கஸ்டம்ஸ் ஆக்ட் 1962 வழக்குப்பதிவு செய்து, பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.

கடத்தலுக்கான காரணம், அதற்கு உடனடியாக அவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவற்றின், மொத்த மதிப்பு 4.82 கோடி ஆகும்.

இது குறித்து கோவை நுண்ணறிவு பிரிவு வருவாய் இயக்குனரகம், சதீஷ் கூறுகையில், கோவையில் இரண்டாவது முறையாக அதிக அளவிலான தங்கம் கடத்தப்பட்டு, பிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முதல்முறையாக வெளிநாட்டு சிகரெட் அதிக மதிப்பில் பிடிக்கப்பட்டது, இதுவே முதல் முறை என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...