நீலகிரி வண்டிச்சோலை ஊராட்சியில் தேனீக்கள் கொட்டியதில் தோட்ட தொழிலாளி படுகாயம்..! குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் வண்டிச்சோலை ஊராட்சியில் தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த தோட்ட தொழிலாளி குன்னூர் அரசு லாலி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் வண்டிச்சோலை ஊராட்சியில் தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த தோட்ட தொழிலாளி குன்னூர் அரசு லாலி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு பெரும்பாலும் தேயிலை, காய்கறி தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு வசிக்கும் தோட்ட தொழிலாளி செல்வம் என்பவர் தனது தோட்டத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த தேன் கூடு கலைந்து அதிலிருந்த தேனீக்கள் செல்வத்தை சரமாரியாக கட்டியது.

அப்போது, அவரது அலறல் கேட்டு அங்கு சென்ற மற்ற தொழிலாளர்களையும் தேனீக்கள் தாக்கின.



இதில் படுகாயம் அடைந்த செல்வத்தை கிராமத்தில் ஆம்புலன்ஸ் சென்று வர அகலமான சாலை வசதி இல்லாததால் ஊர்மக்கள் தொட்டில் கட்டி தூக்கி வந்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...