கோவை: கோவை சுந்தராபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ் 1 மாணவர் பரிதாப பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம் பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சோலைராஜா (16) இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக இவர் வைரஸ் தொற்று காரணமாக தொண்டை பகுதி வீங்கி அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த சோலை ராஜாவிற்கு காய்ச்சல் அதிகமாக காணப்பட்டது. அதனால் அவர் மிகவும் சோர்வடைந்து மயங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதனையடுத்து, அவரை அவரது பெற்றோர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.