தமிழகத்தில் கோயில் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் களவாடப்படுகிறது - பொள்ளாச்சியில் ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் வி.எஸ்.மாரிமுத்து குற்றச்சாட்டு

கோவை: ஆர்.எஸ்.எஸ். சார்பில் தெய்வீக தமிழக சங்கம் என்ற இயக்கம் மூலம் பொது மக்களை சந்தித்து, தமிழகத்தில் இந்து மதத்திற்கு எதிராக சில அமைப்புகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு கலவரத்தை தூண்டிவிடும் வகையில் செயல்படுவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.


கோவை: ஆர்.எஸ்.எஸ். சார்பில் தெய்வீக தமிழக சங்கம் என்ற இயக்கம் மூலம் பொது மக்களை சந்தித்து, தமிழகத்தில் இந்து மதத்திற்கு எதிராக சில அமைப்புகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு கலவரத்தை தூண்டிவிடும் வகையில் செயல்படுவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கான, பரப்புரை துவக்க விழா நிகழ்ச்சி இன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில், RSS மாநில தலைவர் வி.எஸ் மாரிமுத்து கலந்து கொண்டார்.



பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான பல லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளது. இதில், 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளது என்று தெரியவில்லை. தொடர்ந்து, தமிழகத்தில் கோயில் சிலைகள் திருடப்பட்டு வருகிறது. இதைப்பற்றி அரசாங்கத்திற்கு எந்த கவலையும் இல்லை, ஆன்மீக நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் தலையீட்டால் சமுதாயத்தில் குழப்பமான சூழ்நிலை உருவாகி வருகின்றது, என்றார்.

மேலும், தமிழகத்தில் உள்ள பல லட்சம் கோயில்களில் 4000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. பெருவாரியான கோயில்களில் தீபம் ஏற்றக்கூட வழியில்லாமல் உள்ளது வருத்தமளிக்கிறது. அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக கோயில் சொத்துக்கள் களவாடப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், அதிகார பலத்தை வைத்து இந்து சமுதாயத்தை ஒடுக்கி வருகிறார்கள், என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...