கோவையில் குழந்தையை கடத்தப்பட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு..! சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு குழந்தையை மீட்ட போலீசார்!

கோவை: கோவை அடுத்த கோவைபுதூர் 3 வயது குழந்தை ஒரு பெண் மாயமானதால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை அடுத்த கோவைபுதூர் 3 வயது குழந்தை ஒரு பெண் மாயமானதால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று ஒரு ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தையை ஒரு பெண் தூக்கிக் கொண்டு செல்வதைப் பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பயணிகளை இறக்கிவிட்டு விட்டு குழந்தையை தேடினார். ஆனால், அதற்குள் பெண்ணும் குழந்தையும் மாயமாகி இருந்தனர்.

இதனால் பதட்டத்தில் செய்வதறியாது நின்ற ஆட்டோ டிரைவர் உடனே 100 டயல் செய்து எனது குழந்தையை கடத்தி விட்டார்கள் என கதறினார். இதனையடுத்து, குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் தேடி அலைந்த போலீசார் குழந்தையை அதே பகுதியில் மீட்டனர்.

அப்போது, விசாரணை நடத்தியதில் ஆட்டோ ஓட்டுனரின் குழந்தையை கடத்தியது டிரைவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஆட்டோ டிரைவரிடம் குழந்தையை ஒப்படைத்த சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். மன நலம் பாதிக்கப்பட்டதால் அப்பெண்ணின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பத்திரமாக வீட்டில் ஒப்படைத்தனர்.

குழந்தையை கடத்திவிட்டதாக தகவல் பரவியதால் கோவைப்புதூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து குழந்தையை மீட்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...