திருப்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் டாஸ்மார்க் அதிகாரிகளுடன் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது எனவும் மேலும் நவம்பர் 19ம் தேதியுடன் அந்த டாஸ்மாக் கடை அப்பகுதியில் மூடப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் கடை மூடப்படாமல் செயல்படுவதாக தெரிகிறது.

எனவே, பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை அமல் படுத்தும் விதமாக அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...