கோவை வாலங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 80 சதவீதம் நிறைவு..!

கோவை: கோவை வாலங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடி மதிப்பில் நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை: கோவை வாலங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடி மதிப்பில் நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.



கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.



இதில், குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.48 கோடி ரூபாய்க்கு வாலாங்குளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்: 

கோவை திருச்சி சாலையில் இருந்து சுங்கம் பைபாஸ் செல்லும் சாலையில் உள்ள வாலங்குளம் பகுதியில் சிறுவர்கள் விளையாட ‘பிளேயிங் ஜோன்’ பணிகள், சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி, நடைபயிற்சி தளம், தண்ணீரில் மதந்து இருக்கும் மிதவை பாலம் போன்றவை ஒரளவு முடிக்கப்பட்டு விட்டுள்ளன. அதே போல் சுங்கம் பைபாஸ் பாலம் கீழ் பகுதியில் வாலாங்குளம் கரைப்பகுதியில் உணவகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. 

வாலாங்குளம் தண்ணீரில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன, என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...