கோவை: வேல் யாத்திரையை கோவை நகருக்குள் அனுமதிக்க கூடாது என்று தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.
கோவை: வேல் யாத்திரையை கோவை நகருக்குள் அனுமதிக்க கூடாது என்று தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.கட்சி சார்பில் வேல் யாத்திரையை அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் வேல் யாத்திரைய மேற்கொண்டு உள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தமிழக அரசு இந்த யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. தடையை மீறி வேல் யாத்திரையானது நடைபெற்று வரும் நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், மத்திய ஆளுகின்ற மோடி அரசு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை இயக்குவதோடு கல்வி உரிமைகளில் மாநில உரிமைகளை பறிப்பது, ஹிந்தியை தமிழ்நாட்டில் புகுத்துவது என்ற மக்கள் விரோத செயல்பாடுகளை செய்து வருவதாகவும் தவறான பொருளாதாரத்தால் விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் என்று மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மக்களை திசை திருப்புகின்ற வகையில் பாஜகவினர் இந்த யாத்திரையை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
வேல் யாத்திரையை கலவர யாத்திரையாக நடத்துகின்ற முயற்சியை அவர்கள் செய்து வருகின்றனர் என்று விமர்சித்த அவர், நீதிமன்றம் இது ஆன்மீக யாத்திரை அல்ல அரசியல் யாத்திரை என்று கூறி இரண்டு முறை தடை விதித்தும் இவர்கள் அதை நடத்தி வருகின்றனர் என்றும் வைரஸ் தொற்று காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் எனவும் அந்த பிரச்சாரங்களில் கூட கலவரத்தைத் தூண்டும் வகையில் தான் பேசி வருகின்றார்கள் என தெரிவித்தார்.
இதற்கு காவல்துறை அனுமதி மறுக்காமல் கடைசியில் கைது செய்யலாம் என்ற நோக்கத்தோடு மற்ற மாவட்டங்களைப் போலவே கோவை மாவட்ட காவல் துறையும் நினைத்துக்கொண்டு இருப்பதாக நினைக்கின்றனர் இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
மேலும், கோவை நகருக்குள் யாத்திரை வருவதையே காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் எனவும் இல்லை எனில் அனைத்து அமைப்புகளும் இணைந்து வருகின்ற 22ம் தேதி வேல் யாத்திரை நடைபெறும் தினத்தன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.