திருப்பூர் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூர் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதே பகுதியில் புதிதாக டாஸ்மார்க் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் இடம் உரிய மனு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இருக்கும் பட்சத்தில் தற்போது புதிதாக நேற்று இரவோடு இரவாக ஒரு டாஸ்மாக் கடையை திறந்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளால் இப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கடையால் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். எனவே, மாவட்ட நிர்வாகம் அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...